லண்டன்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த மார்ச்.27ல் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தனது வீட்டிலே ஜான்சன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று கொரோனா அறிகுறியுடன் தெற்கு லண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் போரிஸ் ஜான்சன் அனுமதிக்கப்பட்டார்.
திங்களன்று திடீரென உடல்நிலை சற்று மோசமடையவே ஐ.சி.யூவில் போரிஸ் ஜான்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெண்டிலேட்டர் கருவி உதவியின்றி வழக்கமான ஆக்ஸிஜன் சிகிச்சை மூலம் பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
<no title>மருத்துவமனையில் இருந்து போரிஸ் ஜான்சன்'டிஸ்சார்ஜ்'