கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. துபாயில் அரச குடும்பத்தில் உள்ள சுமார் 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கத்தால் பல நாடுகளிலும் மக்கள் பசியாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
கொரோனா பாதிப்பு காலங்களில் துபாயில் உள்ள பாக்., சங்கம் சுமார் 150 குடும்பங்களுக்கும் அதற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கு இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது. இது தொடர்பாக பிடிஏ அமைப்பின் இயக்குனர் ரிஸ்வான் பேன்ஸி அந்நாட்டு செய்தியாளர் களிடம் கூறியதாவது : நாங்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 100 உணவுப் பொட்டலங்களை தகுதியுள்ளவர்களுக்கு விநியோகித்து வருகிறோம், ஆனால் இப்போது அதிகமான மக்கள் உதவிக்காக எங்களைத் தொடர்புகொள்வதால் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் கொரோனா தொற்று காலங்களில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்டவர்கள் இந்த உணவு வழங்குவதால் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்
ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உணவு வழங்கும் இந்த உன்னத சேவையில் பல சமூக சேவகர்களும் பங்களிக்க வேண்டும். எங்கள் (பிஏடி) அமைப்பு உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு அளித்துக்கொண்டே இருக்கும். கடந்த 10 நாட்களில் எங்களது பிரசாரம் அதிகரித்துள்ளது. எமிரேட்சின் துபாய், ஷார்ஜா போன்ற பகுதிகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்களுக்கு அவர்களது தேசியத்தை (நாடு) பொருட்படுத்தாமல் உணவு விநியோகிக்கப்படுகின்றன. "உதவிக்காக எங்களை அழைக்கும் நபர்களின் வாசலில் நாங்கள் உணவு வழங்க முயற்சிக்கிறோம்," இவ்வாறு அவர் கூறினார்.